அஜித் ரசிகர்கள் அவர்களது ரிங்டோன் மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது - ஜி.வி பிரகாஷ் குமார்
சினிமா
ஆதிக் ரவிச்சந்திரன் மார்க் ஆண்டனி திரைப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சுனில் , நஸ்லேன், பிரசன்னா , அர்ஜூன் தாஸ் மற்றும் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் இசையை தேவி ஸ்ரீ பிரசாத் மேற்கொள்கிறார். இந்நிலையில் படத்தின் பின்னணி இசையை ஜிவி பிரகாஷ் குமார் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை ஜிவி பிரகாஷ் அவரது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தி அதனை உறுதி செய்துள்ளார். இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்ட அவர் இது குறித்த சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் " நான் தற்பொழுது இரண்டு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் 2 திரைப்படங்களுக்கு பின்னணி இசையமைத்து வருகிறேன். தற்பொழுது அதில் ஒரு திரைப்படத்தின் கதாநாயகனின் தீம் மியூசிக் இசையமைத்துள்ளேன், அவர்களின் ரசிகர்கள் காலர் டியூன் மாற்றும் நேரம் வந்து விட்டது."
இவர் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தை தான் குறிப்பிட்டு கூறிகிறார் என நெட்டிசன்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
ஜி.வி பிரகாஷ் குமார் சமீபத்தில் இசையமைத்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரு திரைப்படங்களும் மாபெரும் வெற்றியை பெற்றது. படத்தின் இடம் பெற்ற பாடல்களும் ஹிட்டானது.























