மினுவாங்கொடை நகர சபை மேயர் ராஜினாமா
இலங்கை
தேசிய மக்கள் சக்தியின் மினுவாங்கொடை நகர சபை மேயரான அசேல விக்ரமாராச்சி, பதவியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மினுவாங்கொடை நகர சபையில் இன்று நடைபெற்ற சிறப்பு பொதுக் கூட்டத்தில், அவர் இதனை அறிவித்தார்.
மினுவாங்கொடை நகர சபை வரலாற்றில் மேயர் ஒருவர் ராஜினாமா செய்வது இதுவே முதல் முறை என்று கருதப்படுகிறது.
ஆறு மாதங்கள் என்ற மிகக் குறுகிய காலத்திற்குப் பின்னர், பதவியிலிருந்து விலகுவதாகவும், தனது ராஜினாமா எந்தவொரு அழுத்தத்தினாலும் எடுக்கப்பட்டது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது ராஜினாமாவை தனது கட்சிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாகவும் அசேல விக்ரமாராச்சி குறிப்பிட்டுள்ளார்.






















