காதலர் உடன் நெருக்கமான போட்டோவை வெளியிட்ட பிரியா பவானி ஷங்கர்
சினிமா
நடிகை பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்து ஹீரோயினாக வந்தவர். அவரது லுக் மட்டுமின்றி தமிழ் பேசும் விதத்திற்கும் அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர்.
சமீபத்தில் அவர் டிமான்டி காலனி 2, பிளாக் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
அவர் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே ராஜாவேல் என்பவர் உடன் காதலில் இருந்து வருகிறார். அவரை பிரேக் அப் செய்துவிட்டார் என்று கூட சில முறை தகவல் வந்திருக்கிறது. இருப்பினும் அதை எல்லாம் பொய் என நிரூபிக்க அவர் காதலர் உடன் அடிக்கடி போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் புத்தாண்டு ஸ்பெஷலாக காதலர் உடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு வாழ்த்து கூறி இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்.






















