• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹாட் ஸ்பாட் 2 மச் படத்தின் டீசர் வெளியீடு 

சினிமா

"திட்டம் இரண்டு, அடியே" ஆகிய படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு 'ஹாட் ஸ்பாட்' என்ற படம் வெளியானது. இத்திரைப்படத்தில் கலையரசன், சாண்டி மாஸ்டர், ஆதித்யா பாஸ்கர், ஜனனி ஐயர், சோபியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரே படத்தில் நான்கு கதைகளம் அமைந்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றி தொடர்ந்து தற்போது, அதன் இரண்டாம் பாகமான 'ஹாட் ஸ்பாட் 2 மச்' என்ற படத்தினை இயக்கி வருகிறார். இதில் பிரியா பவானி சங்கர், எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, ஆதித்யா பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் செவன் வாரியர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர். சமீபத்தில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. 
 

Leave a Reply