படங்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம் காரணமா?- கீர்த்தி ஷெட்டி
சினிமா
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் கீர்த்தி ஷெட்டி, கார்த்தி ஜோடியாக 'வா வாத்தியார்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கவுள்ளார். மேலும் பிரதீப் ரங்கநாதனுடன் அவர் நடித்த 'எல்.ஐ.கே.', ரவிமோகனுடன் நடித்துள்ள 'ஜீனி' அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கீர்த்தி ஷெட்டியிடம், 'சினிமாவில் உங்கள் ஆசை என்ன?' என்று கேட்கப்பட்டது. அதற்கு கீர்த்தி ஷெட்டி, ''பிடித்த ஹீரோக்களுடன் உடனடியாக நடித்துவிட வேண்டும். அப்போதுதான் பயமும், பதற்றமும் குறையும். இதுதான் என் ஆசை'', என்று பதிலளித்தார்.
'படங்களின் வெற்றிக்கு அதிர்ஷ்டம் காரணமா?', என்ற கேள்விக்கு, ''அதிர்ஷ்டம் சில நேரங்களில் கைகொடுக்கலாம். சில நேரங்களில் கைகொடுக்காமல் போகலாம். எனவே அதிர்ஷ்டத்தின் மீது பழி போட்டு போகக்கூடாது. இன்னும் நாம் என்ன செய்திருக்கலாம்? என்று தான் யோசிக்கவேண்டும். அதுவே வெற்றிக்கு வழி'', என்று கீர்த்தி ஷெட்டி குறிப்பிட்டார்.






















