• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் வெளியிட்ட கருப்பு படக்குழு

சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான 'கங்குவா' அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில், அடுத்து வெளியான 'ரெட்ரோ' படம் ஓரளவு வரவேற்பை பெற்றது என்று சொல்லாம்.

இதனை தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள சூர்யாவின் 45-வது படமான 'கருப்பு' படம் விரைவில் வெளியாக உள்ளது. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் நீதிமன்ற வழக்கு ஒன்றை மையமாக வைத்து அதில் கடவுள் நம்பிக்கையை இணைத்து உருவாகியுள்ளது. 'கருப்பு' திரைப்படத்தை அடுத்தாண்டு ஜனவரி 23-ந்தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில், 'கருப்பு' படக்குழு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
 

Leave a Reply