• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் இல்லை

இலங்கை

லிட்ரோ உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் 2026 ஜனவரி மாதத்திற்கு மாறாமல் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு தற்போதைய விலைகளைப் பராமரிக்க முடிவு எடுக்கப்பட்டதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

லிட்ரோ உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் தற்போதைய விலைகள் பின்வருமாறு:

    12.5 கிலோ கேஸ் சிலிண்டர்: ரூ.3,690
    5 கிலோ கேஸ் சிலிண்டர்: ரூபா 1,482
    2.3 கிலோ கேஸ் சிலிண்டர்: Rs. 694

இதேவேளை, 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் தனது உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரித்துள்ளதாக லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட விலை நிர்ணயத்தின் கீழ், 12.5 கிலோ கிராம் கேஸ் சிலிண்டர் 150 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 4,250 ரூபாவாகும்.

5 கிலோகிராம் கேஸ் சிலிண்டர் 65 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 1,710 ஆகும்.
 

Leave a Reply