கொஹுவல துப்பாக்கிச் சூடு - பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸார்
இலங்கை
கொஹுவல பகுதியில் ஒருவரை படுகாயப்படுத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை அடையாளம் காண இலங்கை பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கொஹுவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடியாவத்தை பகுதியில் 2025 டிசம்பர் 30 அன்று அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள நபர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதனால், காயமடைந்த நபர் சிகிச்சகை்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான விசாரணைகள் பொலிஸாரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
விசாரணையின் ஒரு பகுதியாக, பொலிஸார் ஒரு சந்தேக நபரை அடையாளம் கண்டு, பொலிஸ் கலைஞரின் உதவியுடன் ஒரு முக ஓவியத்தை வரைந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சந்தேக நபரை அடையாளம் காண உதவும் வகையில் இந்த ஓவியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகவே, சந்தேக நபர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் கொஹுவல பொலிஸ் நிலையம் அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் கொஹுவல காவல்துறையை 071-8591669 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அல்லது குற்றப் புலனாய்வுப் பிரிவை 071-4146727 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
விசாரணையை விரைவுபடுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.






















