தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி- யாழ் . மாவட்ட செயலர் இடையில் சந்திப்பு
இலங்கை
தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரரை யாழ் . மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் தையிட்டி விகாரையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.
கடந்த 31ஆம் திகதி தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்களை மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதன் தொடர்ச்சியாக தையிட்டி விகாரதிபதியை இன்றைய தினம் சந்தித்ததாக மாவட்ட செயலர் தெரிவித்தார்.






















