நாளை வெளியாகும் ஜன நாயகன் டிரெய்லர் - தியேட்டர்களில் முன்பதிவு தொடக்கம்
சினிமா
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
இதனை தொடர்ந்து 'ஜன நாயகன்' படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், 'ஜன நாயகன்' படத்தின் டிரெய்லரை தியேட்டர்களில் ரசிகர்கள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் உள்ள ARK ராம் முத்துராம் சினிமாஸ் ஆர்ஜிபி-யில் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 'ஜன நாயகன்' டிரெய்லரை காண ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.






















