• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பங்குச் சந்தை உலகின் தந்தை Warren Buffett ஒய்வு பெற்றார்

அமெரிக்காவின் பெர்க்சயர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனத்தின் தலைமை நிறைவேற்றி அதிகாரி பொறுப்பிலிருந்து அனுபவம் வாய்ந்த பங்குச் சந்தை முதலீட்டாளரான வாரன் பபெட் (Warren Buffett) நேற்று (1) முதல் ஓய்வு பெற்றுள்ளார்.

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் அவர் (Warren Buffett) தமது ஓய்வு குறித்த அறிவிப்பை வௌியிட்ட நிலையில், தமது 94 வயதுடன் அவர் ஓய்வு பெற்றுள்ளார்.

அவருக்கு (Warren Buffett)  பின்னர் அவரது பொறுப்புகள் கிரெக் ஏபல்லிடம் (Greg Abel)ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தோல்வியடைந்து கொண்டிருந்த ஒரு ஆடை உற்பத்தி நிறுவனத்தை, 1.16 டிரில்லியன் டொலர்​ மதிப்புள்ள ஒரு மாபெரும் முதலீட்டு நிறுவனமாக மாற்றிய பபெட், உலகின் மிக வெற்றிகரமான முதலீட்டாளராகக் (Warren Buffett) கருதப்படுகிறார்.

தமது மூளையை முதலீடாக கொண்டு அமர்ந்த இடத்தில் இருந்தே கோடிகளை அள்ளும் மாபெரும் முதலீட்டாளரான வாரன் பபெட் (Warren Buffett) பங்குச் சந்தை உலகின் தந்தையாகவும் விளங்குகிறார்.

2025 ஆம் ஆண்டில் அவரது (Warren Buffett) சொத்து மதிப்பு 160 -169 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply