• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து யாழ்.பல்கலைகழக மாணவர்களும் பங்கேற்பு

இலங்கை

சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை முன்பாக காணி உரிமையாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஆதரவு தெரிவித்து , யாழ்.பல்கலைகழக மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் பெருமளவில் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்.

தையிட்டி விகாரையில் இன்றைய தினம் பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியாவில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர் சிலையுடன் வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரை, காங்கேசன்துறை பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னர், அவர்களை தையிட்டிக்கு செல்ல விடாது, பேருந்தில் திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply