விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்…
இலங்கை
விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமா க எஸ். அச்சுதன் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ சுனில் குமார கமகே அவர்களிடமிருந்து அவர் தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
நியமனத்தைத் தொடர்ந்து, விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்கள அதிகாரிகளுடனான தனது முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பை அமைச்சின் வளாகத்தில் அமைந்துள்ள டங்கன் வைட் (Duncan White) மண்டபத்தில் அவர் நடத்தினார்.
இதன்போது நாட்டின் விளையாட்டுத்துறையின் எதிர்கால மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து அவர் அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.






















