பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிரித்தானிய பிரஜை பாதுகாப்பாக மீட்பு
இலங்கை
மிரிஸ்ஸ கடற்கரையில் நேற்று (11) நீராட்டிக் கொண்டிருந்த போது பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 65 வயதான பிரித்தானிய பிரஜை ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
கொடவில காவல் பிரிவுக்குள் நண்பகல் வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது பணியில் இருந்த கொடவில காவல் துறையின் உயிர்காக்கும் படையினர் விரைந்து தலையிட்டு வெளிநாட்டு பிரஜையை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.






















