• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கச்சத்தீவு திருவிழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த மீனவர்கள்

இலங்கை

கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் பெரும் திருவிழாவிற்கான ஏற்பாட்டு கூட்டத்தை பாரம்பரிய விசை படகு மீனவர்கள் இன்று புறக்கணித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

1974  ஆண்டின் கச்சத்திவு ஒப்பந்த அடிப்படையில் பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகுகளில் கச்சத்திவு திருவிழாவிற்கு சென்று தமது நேர்த்திக்கடன் செய்வதற்கான உடன்பாடு இருந்து வந்த நிலையில் சில வருடங்களாக கச்சத்தீவு திருவிழா வணிக ரீதியாக விசைப்படகுகளில் கட்டணம் அறவீடு  செய்து சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று ஒரு வணிக சுற்றுலா பயணமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் தாம் பாரம்பரிய நாட்டு படகில் கச்சதீவு திருவிழாவிற்கு செல்வதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று தெரிவித்தே இன்று இராமேஸ்வரம் புனித சூசையப்பர் ஆலயத்தில் இடம் பெற்ற கச்சதீவு திருவிழா ஏற்பாட்டு கூட்டித்தை புறக்கணித்துள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்னர் நாட்டு படகுகளில் கச்சதீவு திருவிழாவிற்கு நாட்டு படகுகள் செல்வதற்கு அனுமதி மறுக்க பட்டிருந்த நிலையில் உச்ச நீதி மன்றத்தை நாடி 1974 ம் ஆண்டின் ஒப்பந்த பிரகாரம் நாட்டு படகில் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு செல்லலாம் என்ற அனுமதியை பெற்றிருந்தனர்.

ஆனாலும்  எதிர்வரும்  பிப்ரவரி 27ஆம் திகதி நடைபெறவுள்ள திருவிழாவிற்கு தமது நாட்டு படகில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றே இன்று புறக்கணித்தனர்
 

Leave a Reply