• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைக்கு அமெரிக்கா மேலதிகமாக 2 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவி

இலங்கை

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவி செய்வதற்கான மனிதாபிமான உதவியாக இன்னும் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று (13) அறிவித்தது.

இதன் மூலம் டித்வா சூறாவளி நிவாரணத்திற்காக அமெரிக்கா வழங்கிய மொத்த உதவிகளின் பெறுமதி 4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சூறாவளி கரையைக் கடந்து 72 மணித்தியாலங்களிற்குள் அமெரிக்கா அறிவித்த 2 மில்லியன் அமெரிக்க டொலர்களின் தொடர்ச்சியாக இப்புதிய நிதியுதவி அமைகிறது.

இப்பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மிகச்சரியான நேரத்தில், செயற்திறனுடைய உதவிகளை வழங்குவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டினை இது அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.
 

Leave a Reply