• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல வாகனங்களை சேதப்படுத்திய மோட்டார் சைக்கிள் சாரதி கைது

இலங்கை

கடுவலை – கொள்ளுப்பிட்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சாரதி ஒருவர் கையில் ஒரு ஆயுதத்துடன் பல வாகனங்களை தாக்குவதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.

இந்த சம்பவம் ஜனவரி 12 ஆம் திகதி மாலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

வெலிக்கடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேக நபரைப் பின்தொடர்ந்து சென்று சிறிது நேரத்திலேயே அவரைக் கைது செய்தனர்.

கைதான சந்தேக நபரின் தாக்குதல் காரணமாக நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கைதான சந்தேக நபர் ராகம பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், அவரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் பொலிஸார் முன்னெடுத்தனர்.
 

Leave a Reply