சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் மழை நீர் வழிந்தோடும் வழிகள் சீரமைப்பு
இலங்கை
மழைக்காலங்களில் ஏற்படும் நீர்த்தேக்கம் மற்றும் சுற்றுப்புற சுகாதாரப் பிரச்சினைகளைத் தடுக்கும் நோக்கில், சம்மாந்துறை மத்திய வட்டாரத்தில் மழைநீர் சீராக வடிந்தோடும் வகையில் அனைத்து வடிகால்களையும் துப்பரவு செய்து சீரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இப்பணிகள், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் ஆலோசனையின் கீழ், பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்களின் ஒருங்கிணைப்பிலும், பிரதேச சபை உறுப்பினர் ஆசிக் அஹமட் அவர்களின் பங்குபற்றுதலுடனும், பிரதேச சபை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுப்புறத்தை சுத்தமாக பேணுவதும், மழைநீர் தேங்கி நோய் பரவும் சூழ்நிலைகளைத் தவிர்ப்பதும் இப்பணிகளின் முக்கிய நோக்கமாகும். பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, இவ்வடிகால் சீரமைப்பு மற்றும் துப்பரவு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






















