சரிகமப புகழ் சுகிர்தராஜா சபேசனை வரவேற்று கௌரவிற்கும் நிகழ்வு
இலங்கை
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச விநாயகபுரம் மண்ணின் மைந்தன் சரிகமப புகழ் சுகிர்தராஜா சபேசனை வரவேற்று கௌரவிற்கும் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் இந்து இளைஞர் சேவை மன்றத்தின் ஏற்பாட்டின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் திரவியராஜ் தலைமையில் இந்து இளைஞர் மன்ற தலைவர் கைலாயபிள்ளையின் ஒருங்கிணைப்பில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வானது ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் ஆலங்களின் அனுசரணையில் இடம்பெற்றது.
நிகழ்வானது அக்கரைப்பற்று மருதயடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரினால் மலை அணிவித்து வரவேற்புடன் ஆரம்பமாகி பின்னர் வாகன பவனியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் வரை அழைத்துவரப்பட்ட சபேசன் அக்கரைப்பற்று ஸ்ரீ மகாகணபதி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜைகளில் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆலையடிவேம்பு பிரதேச செலகத்தின் கலாசார மண்டபத்தில் பாடகர் சபேசனுக்கு கௌரவம், நினைவுச்சின்னம் மற்றும் வாழ்த்துப்பா என்பன வழங்கி வைக்கப்பட்டன.
பொதுமக்கள் மற்றும் பொது அமைப்பும் ,ஊடக குழுவினரால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது…
இதன்போது சபேசனின் தாய் தந்தையரும் குறித்த நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் மாணவர்களின் கலைநிகழ்வுகளுடம் இடம்பெற்றதுடன் ஆலையடிவேம்பு பிரதேச கலைஞர்களும் இந் நிகழ்வின் போது கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.























