விஜய்சேதுபதி பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ட்ரெய்ன் படக்குழு
சினிமா
பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் ட்ரெயின். மிஷ்கின் கடைசியாக 2020ம் ஆண்டில் சைக்கோ படம் வெளியானது. இதில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஆகியோர் நடித்துருந்தனர். இந்தப் படம் இளையராஜாவின் இசையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதற்கிடையே, ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காகக் காத்திருக்கிறது. இதுவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, ட்ரெய்ன் படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி கையில் ஒரு பையுடன், மிகவும் எதார்த்தமான அதே சமயம் தீவிரமான ஒரு தோற்றத்தில் காணப்படுகிறார்.
பெயருக்கு ஏற்றார் போலவே, இந்தப் படத்தின் கதை பெரும்பாலும் ரெயிலை மையமாக வைத்தே நகரும் ஒரு டார்க் த்ரில்லர் வகை எனத் தெரிகிறது.























