• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் இந்த வகை வாகனங்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடா

கனடாவில் முன்னணி வாகன பண்டக் குறியான போர்ட் (Ford) வாகனங்கள் தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எஞ்சின் பிளாக் ஹீட்டரில் ஏற்படக்கூடிய ஷார்ட் சர்க்யூட் காரணமாக தீ விபத்து அபாயம் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

போர்ட் நிறுவனத்தின் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை இரண்டு தனித்தனியான மீளப்பெறல் (Recall) நடவடிக்கைகளின் கீழ் திரும்பப்பெறுவதாக கனடிய போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

சில வாகனங்களில் எஞ்சின் பிளாக் ஹீட்டரில் இருந்து குளிரூட்டும் திரவம் ஒழுகும் அபாயம் உள்ளது.

இதனால், பிளாக் ஹீட்டர் இணைக்கப்பட்டுள்ள போது ஷார்ட் சர்க்யூட் ஏற்படலாம்” என இரு மீளப்பெறல் அறிவிப்புகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மீளப்பெறல் அறிவிப்புகள் ஜனவரி 9 அன்று முதன்முறையாக வெளியிடப்பட்டு, பின்னர் வியாழக்கிழமை புதுப்பிக்கப்பட்டன. 2.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட சில வாகனங்களுக்கு மட்டுமே இந்த மீளப்பெறல் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போர்ட் எஸ்கேப், போர்ட் போகஸ் மற்றும் லிங்கொன் எம்.கே.சீ, ஃபோர்டு பிராங்கோ, ஃபோர்டு பிராங்கோ ஸ்போர்ட்,ஃபோர்டு எஸ்கேப், ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர், ஃபோர்டு ஃபோகஸ், ஃபோர்டு மேவரிக், ஃபோர்டு ரேஞ்சர், லிங்கன் கோர்செய்ர், லிங்கன் எம்கேசி, ஆகிய மாடல்கள் இவ்வாறு மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு Ford நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்வையிடவோ அல்லது 1-800-565-3673 என்ற எண்ணை தொடர்புகொள்ளவோ வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply