• Welcome to TamilsGuide
செய்திகள் 1

2027 முதல் நாடு முழுவதும் ஒரேமுறையிலான பாலர் கல்வித் திட்டம் - அமைச்சர் சரோஜா அறிவிப்பு

இலங்கை

2027-ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரேமாதிரியான பாலர் கல்வித்திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இளங்குழந்தைப் பருவக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

முதல் நாடு

நாட்டில் மற்ற கல்வி நடவடிக்கைகளுடன் இளங்குழந்தைப் பருவக் கல்வியும் கைகோர்த்துச் செல்ல வேண்டும் என்றும், இதில் கல்வி அமைச்சும் தலையிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பாலர் கல்விப் பாடம் முறைசாராமல் உள்ளது என்றும், அது இன்னும் ஒரு அரசாங்க சேவையாக மாறவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

Leave a Reply