கனடாவில் நேரிட்ட பயங்கர கார் விபத்து - இருவர் சம்பவ இடத்திலேயே பலி
கனடா
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள 'ஆர்க்கிபெலகோ' நகரியத்தின் பாயிண்ட்-ஓ-பாரில் பகுதியில் கடந்த நேரிட்ட கார் விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நெடுஞ்சாலை 69-இல் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததும், ஒன்டாரியோ மாகாணக் காவல்துறையின் போக்குவரத்து விபத்து மேலாண்மை மற்றும் அமலாக்கக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்வதற்காக, பாரி சவுண்டில் உள்ள நெடுஞ்சாலை 124 மற்றும் பாயிண்ட்-ஓ-பாரில் உள்ள நெடுஞ்சாலை 522 ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நெடுஞ்சாலை 69-இன் பகுதி இருபுறமும் பல மணி நேரம் முற்றிலுமாக மூடப்பட்டது.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணை மற்றும் விபத்துக்குள்ளான காரை அகற்றும் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்த நெடுஞ்சாலை மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் யார், அவர்கள் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் விபத்துக்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்த மேலதிக விவரங்கள் எதையும் காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
இந்த விபத்து குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.























