எட்டு இலட்சம் பாடப்புத்தகங்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்
இலங்கை
கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள், விநியோக மையங்களுக்கு முறையாக ஒப்படைக்கப்படவில்லை என தலங்கம பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை கல்வி வெளியீடுகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் கல்வி வெளியீடுகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட 19,892 முதலாம் வகுப்பு தமிழ் செய்முறைப் பாடநூல்கள் மற்றும் செய்முறைப் பாடநூல்கள், திட்டமிட்டபடி விநியோக மையங்களுக்கு ஒப்படைக்கப்படாத சம்பவம் குறித்து 12ஆம் திகதி தலங்கம பொலிஸாருக்குப் புகார் வந்திருந்தது. LanguageResources
மே 4ஆம் திகதி , சம்பந்தப்பட்ட புத்தக இருப்பை ஒரு ஒப்பந்த நிறுவனத்திற்குக் கொண்டு செல்ல கல்வி வெளியீடுகள் திணைக்களம் அனுமதி பெற்றிருந்தபோதிலும், திட்டமிட்டபடி விநியோகிக்கப்பட வேண்டிய கிழக்கு மாகாணத்தில் உள்ள 12 மையங்களுக்கு அந்தப் புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.
சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, முதலாம் வகுப்பின் மூன்றாம் பருவத்திற்கான புத்தக இருப்பு, திட்டமிட்டபடி விநியோகிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலங்கம பொலிசார் தரப்பில் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.






















