அமெரிக்க துருப்புகளின் தலைகளுக்கு ஈரான் வெகுமதி - ஆணுக்கு 30,000 , பெண்ணுக்கு 60,000 டொலர்
அமெரிக்க வீரர்களைக் கொல்பவர்கள் அல்லது உயிருடன் பிடிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும் என ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி அமீர் ஹதாமி அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அமெரிக்க வீரர் ஒருவரைக் கொல்லும் அல்லது பிடிக்கும் ஈரானிய ஆணுக்கு 30,000 டொலரும், பெண்ணுக்கு 60,000 டொலரும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க வீரர் மீது தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை அதன் மதிப்பை விட இருமடங்கு விலைக்கு அரசாங்கம் கொள்வனவு செய்து, அதற்குப் பதிலாக புதிய ஆயுதம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள சிறப்பு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்படும் என்றும் ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா–ஈரான் இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.






















