காங்கோவில் எபோலா பலி எண்ணிக்கை 2,325 ஆக உயர்வு
இலங்கை
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,325 ஆக அதிகரித்துள்ளது.
காங்கோவில் எபோலா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுவரை 4,945 பேருக்கு எபோலா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகக் கொடிய வைரஸ் நோய்களில் ஒன்றாகக் கருதப்படும் எபோலா, காங்கோவில் வேகமாகப் பரவி வருவதால், நோயைக் கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சுகாதாரத்துறைக்கு தொடர்ந்து சவால் நீடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.























