• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில். சூட்கேசில் கஞ்சா கடத்திய இளைஞர்கள்

இலங்கை

யாழ்ப்பாணத்தில் பயண பொதிக்குள் கேரளா கஞ்சாவை கடத்தி செல்ல முற்பட்ட இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட வேளை இளைஞர்கள் தப்பியோடியுள்ளனர்.

வடமராட்சி திக்கம் பகுதியில் இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கேரளா கஞ்சாவை கடத்தி செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களை பொலிஸார் வழி மறித்துள்ளனர்.

அதனை அடுத்து இளைஞர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளையும்  , தாம் கொண்டு எடுத்து சென்ற பயண பொதியையும்  கைவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

கைவிட்டு சென்ற பயண பொதியை பொலிஸார் சோதனை செய்த போது, பொதி செய்யப்பட்ட நிலையில் சுமார் 12 கிலோ கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ள பொலிஸார் தப்பி சென்ற இருவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

Leave a Reply