கனடாவை ஆக்கிரமிக்க ட்ரம்ப் முயற்சி செய்வாரா? கனேடியர்கள் கருத்து
கனடா
ட்ரம்ப் கனடாவையும் தனது நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யலாம்என மூன்றில் ஒரு பங்கு கனேடியர்கள் கருதுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
அமெரிக்க அதிகாரிகள் வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்நாட்டின் ஜனாதிபதியைக் கைது செய்து கொண்டுவந்த விடயம் பல நாடுகளுக்கு கவலையை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா வெனிசுலா விடயத்தில் தலையிட்டது அந்நாட்டின் இறையாண்மையை மீறும் விடயம் என தாங்கள் கருதுவதாக சமீபத்திய ஆய்வொன்றில் 53 சதவிகித கனேடியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவின் அந்த நடவடிக்கை, மற்ற நாடுகளும் இதேபோல செயல்பட ஒரு மோசமான முன்னுதாரணமாக அமைந்துவிடலாம் என்றும் கனேடியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், ட்ரம்ப் எதிர்காலத்தில் கனடாவையும் தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யலாம் என தாங்கள் கருதுவதாகவும் 31 சதவிகித கனேடியர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்க அரசின் நடவடிக்கை அமெரிக்கா மீதான எண்ணத்தை மோசமானதாக்கியுள்ளதாக 37 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், மூன்றில் இரண்டு பங்கு கனேடியர்கள், வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கட்டுப்பாட்டுக்குள் எடுப்பதற்காகவே அமெரிக்கா அந்நாட்டு விடயத்தில் தலையிட்டதாக தாங்கள் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.























