கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்
இலங்கை
கடந்த 1993ஆம் ஆண்டு வங்கக்கடலில் வீரகாவியமான விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு உள்ளிட்ட பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுவேறு இடங்களில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டன.இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.
அந்தவகையில் முல்லைத்தீவு – தேராவில் மாவீரர் துயிலுமில்ல மண்டபத்திலும், மூங்கிலாறு வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க வளாகத்திலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கமை அகவணக்கம் செலுத்தப்பட்டு, மாவீரர்களின் திரு உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றிருந்தன.
மேலும் தேரவில் மாவீரர் துயிலுமில்லத்தில் கேணல் கிட்டு உள்ளிட்ட மாவீரர்களின் நினைவாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், மரக்கன்றுகளும் வழங்கிவைக்கப்பட்டிருந்தன.





















