அண்டார்டிகா பனிப்படலத்திற்குக் கீழ் மறைந்திருக்கும் நிலப்பரப்பு
அண்டார்டிகாவை மூடியுள்ள பாரிய பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பை விஞ்ஞானிகள் குழுவொன்று கண்டு பிடித்துள்ளது.
குறித்த ஆய்வுக் குழுவினர் அதிநவீன உயர் தெளிவுத்திறன் (High-resolution) கொண்ட செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி இந்தப் புதிய நிலப்பரப்பைக் கண்டுபிடித்துள்ளது.
அதோடு, அதில் கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மிகவும் விரிவான வரைபடமொன்றையும் அவர்கள் தயாரித்துள்ளனர்.
குறித்த செயற்கைக்கோள் காட்சிகள் ஊடாக, இந்த நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான மலைகள், பாறைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் சமவெளிகள் போன்றவற்றைக் கொண்ட ஓர் அற்புதமான நிலத்தோற்றத்தைக் கண்டறிய ஆய்வுக் குழுவினருக்கு முடிந்துள்ளது.
அதற்கமைய, இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தில் ஏற்படும் கடல் மட்ட உயர்வு மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்து முன்னறிவிப்புகளை வெளியிட முடியும் என விஞ்ஞானிகள் குழு தெரிவிக்கின்றனர்.























