கனடாவிடமிருந்து விடுதலை - மாகாணமொன்றில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள்
கனடா
கனடாவிடமிருந்து விடுதலை வேண்டும் என கோரி புகார் மனு அளிக்க கனேடிய மாகாணமொன்றில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் காட்சிகள் வெளியாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளன.
கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம், இயற்கை வளங்கள் நிறைந்த ஒரு மாகாணமாகும்.
ஆனால், கனடாவுக்கு தாங்கள் தங்கள் வளம் மூலம் பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தும், பதிலுக்கு ஃபெடரல் அரசு தங்களை சரியாக கவனிப்பதில்லை, தங்கள் கருத்துக்கள் நாடாளுமன்றத்தில் எடுபடவில்லை என்னும் கருத்து ஆல்பர்ட்டா மக்களிடையே நிலவிவருகிறது.
ஆகவே, வளம் நிறைந்த ஆல்பர்ட்டா, கனடாவிலிருந்து பிரிந்து தன்னைத்தான் நிர்வகிக்கவேண்டும் என ஆல்பர்ட்டா மக்கள் கருதுகிறார்கள்.
இந்நிலையில், Alberta Prosperity Project என்னும் அமைப்பின் தலைவரான மிச் சில்வெஸ்டர் என்பவர், முறைப்படி அரசின் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று புகார் மனு ஒன்றை உருவாக்கியுள்ளார்.
ஆல்பர்ட்டா கனடாவிலிருந்து பிரியவேண்டும் எனக் கூறும் அந்த புகார் மனுவில் மக்கள் கையெழுத்திடுவது தொடர்பாக விவாதிக்கும் கூட்டங்களில் பங்கேற்க மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கிறார்கள்.
இதற்கிடையில், நான்கு மாதங்களில் அந்த புகார் மனு சுமார் 178,000 கையெழுத்துக்களைப் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.






















