தன்னிடம் எல்லை மீறிய நட்சத்திர ஹீரோவுக்கு பளார் விட்ட பூஜா ஹெக்டே
சினிமா
இந்திய திரையுலகில் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் பூஜா ஹெக்டே. இவர் அழகு, நடிப்பு, நடனம் ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தவர். இவர் தென்னிந்திய சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். பூஜா ஹெக்டே தற்போது பல பெரிய படங்களில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சில காலமாக பிரபல நடிகைகள் தங்களது சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவங்களை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பூஜா ஹெக்டேவும் தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
அதன்படி சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பெரிய பான்-இந்திய படத்தில் பணிபுரிந்தபோது, ஒரு நட்சத்திர ஹீரோ அனுமதியின்றி எனது கேரவனில் நுழைந்து எல்லை மீறி என்னைத் தொட முயன்றார். உடனடியாக அவரை அறைந்தேன். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவர் மீண்டும் என்னுடன் பணிபுரியவில்லை என நடிகை பூஜா ஹெக்டே கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது உண்மையா? இல்லையா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக ஏதுவும் தெரியவில்லை.






















