ஐரோப்பாவின் பல பகுதிகளுக்கு வெப்பநிலை குறித்து எச்சரிக்கை
ஐரோப்பிய நாடுகளில் வரவிருக்கும் நாட்களில் வெப்ப அலை தீவிரமடைந்து வெப்பநிலை 40 பாகை செல்சியஸுக்கும் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதனால், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவின் பிற நாடுகளில் ‘சிவப்பு’ வெப்ப எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
தற்போது பிரான்ஸின் பாதிக்கும் மேற்பட்ட பிராந்தியங்கள் மிகக் கடுமையான வானிலை எச்சரிக்கையின் கீழ் உள்ளன. நூற்றுக்கணக்கான பாடசாலைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
தெற்கு பிரான்சில், வானிலை தொடர்பான ஒரு சம்பவத்தில் இரண்டு மற்றும் நான்கு வயதுடைய இரண்டு குழந்தைகள் தங்கள் குடும்பக் காரில் இறந்து கிடந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளின் அதிகாரிகளும் இதேபோன்ற ‘சிவப்பு எச்சரிக்கைகளை’ விடுத்துள்ளனர். சஹாரா பாலைவனத்திலிருந்து வடக்கு நோக்கி நகரும் வெப்பக் காற்றே வெப்பநிலை உயர்வுக்குக் காரணமாக அமைந்துள்ளது.























