• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமீபத்தில் கனேடிய குடியுரிமை பெற்ற பலருக்கு அரசு அளித்த அதிர்ச்சி - சிலருக்கு ஆறுதலளிக்கும் செய்தி

கனடா

கனடாவில், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கானோருக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில், தங்கள் குடியுரிமைச் சான்றிதழ்களை ஒப்படைக்கக் கோரி அவர்களில் பலருக்கு கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு கடிதம் அனுப்பியதால் பெரும் பரபரப்பு உருவானது.

கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, Bill C-3 என அழைக்கப்படும், வம்சாவளி அடிப்படையிலான கனேடிய குடியுரிமைச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, ஏராளமானோர் கனடாவில் குடியுரிமை கோரி விண்ணப்பித்தார்கள். 

அவர்களில் ஆயிரக்கணக்கானோருக்கு குடியுரிமைச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், ஒரு வாரம் முன்பு, அப்படி கனேடிய குடியுரிமைச் சான்றிதழ் பெற்ற பலருக்கு கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடமிருந்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது.

அந்த கடிதம் அனுப்பப்பட்டவர்களுடைய ஆவணங்களை மீளாய்வு செய்யவேண்டியுள்ளதாகவும், ஆகவே அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட குடியுரிமைச் சான்றிதழ்களை திருப்பிக் கொடுக்குமாறும் அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

அந்த விடயம், இந்த விடயம் குடியுரிமைச் சான்றிதழ் பெற்றவர்களை ஏமாற்றமடையச் செய்தது.

இந்நிலையில், அத்தகைய கடிதம் அனுப்பப்பட்ட பலரில் சிலருக்கு வார இறுதியில் மீண்டும் ஒரு கடிதம் வந்துள்ளது.

அந்தக் கடிதத்தில், நீங்கள் குடியுரிமைச் சான்றிதழ் பெறுவதற்காக அளித்த ஆவணங்களை மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து, ஜூன் மாதம் உங்கள் குடியுரிமைச் சான்றிதழை ஒப்படைக்குமாறு உங்களிடம் கோரப்பட்டது.

உங்கள் வழக்கு முழுமையாக மீளாய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, உங்கள் குடியுரிமை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால், எதனால் இந்தக் குழப்பம், இந்த நபர்களுடைய குடியுரிமையை மீளாய்வு செய்யவேண்டிய நிலை எதனால் ஏற்பட்டது என்பதற்கு, புலம்பெயர்தல் அமைச்சரான Lena Diab தரப்பிலோ அல்லது அவரது துறை தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. 
 

Leave a Reply