தென்றல் வீசும் புரட்சித்தலைவர் புகழ் பாடும் உண்மை நிகழ்வுகளில்.
சினிமா
1978 இல் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பில் படித்து கொண்டு இருந்த மாணவி கௌரி
வீணை வாசிப்பில் திறன் கொண்டு...
நம்ம வாத்தியாருக்கு கடிதம்....அண்ணா எனக்கு திறமை இருக்கு வீணை வாங்க பணம் இல்லை...
நீங்க வாங்கி கொடுங்க என்று கடிதம் எழுத....
1980 இல் தமிழக முதல்வர் ஆன பின் சென்னை கலைவாணர் அரங்கில் அரசு பள்ளியில் பயின்று சிறந்த மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி முதல்வர் தலைமையில்.
வீணை போட்டி முதல் பரிசு மாணவி கௌரி என்று பெயர் வாசிக்க பட கௌரி மேடைக்கு வந்து துணிச்சல் உடன் முதல்வர் வாத்தியார் காதில் அண்ணா இப்பவும் வாடகை வீணைதான் என்று
சொல்ல...
தலைவர் பின் புறம் நின்று கொண்டு இருந்த அரசு அதிகாரி இடம் ஏதோ சொல்ல.
அடுத்த சில விநாடிகள் கழித்து புத்தம் புதிய வீணை ஒன்று மேடைக்கு வர....
கௌரிக்கு சான்றிதழ் பணமுடிப்பு உடன் இந்த வீணையையும் தலைவர் கொடுக்க..
ஆச்சர்யம் அடைந்தார் கௌரி....
கௌரி எழுதிய கடிதம் கிடைத்த உடன் உடனே ஒரு வீணை வாங்க சொல்லி தலைவர் சொல்ல ...உதவியாளர் மைசூரில் ஆர்டர் கொடுக்க அது மறந்தே போனார் அவர்.
விழா அன்று காலையில் நிகழ்ச்சி நிரல் இன்று என்று தலைவர் வாங்கி பார்க்கும் போது முதல் பரிசு வீணை போட்டி கௌரி என்று பெயர் பார்த்து....
கடிதம் அனுப்பிய சிறுமி நினைவுக்கு வர உதவியாளர் மறந்ததை சொல்ல...
விழாவுக்கு புறப்படும் முன்னே சென்னை காதி கிராஃப்ட் அரங்கில் புதிய வீணை வாங்கி வர சொல்லி நம் இதயவீணை பரமசிவம் இடம் சொல்ல....
நடந்தவை வாத்தியார் உதவியாளர் மாணவி கவுரி மற்றும் பரமசிவம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்...
வாழ்க தலைவர் புகழ்.
உங்களில் ஒருவன்.
நெல்லை மணி..
நன்றி...தொடரும்...
மாணவி கௌரி இன்று திருமதி கௌரி ஆகி அவர் குடிபுகுந்த வீட்டில் பூஜை அறையில் அந்த வீணையை வைத்து வணங்கி வருகிறார்.
தான் பெற்ற செல்வங்களுக்கு வீணை பயிற்சி கொடுக்க....
வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு.
தென்றல் வீசும் புரட்சித்தலைவர் புகழ் பாடும் உண்மை நிகழ்வுகளில்.
உங்களில் ஒருவன் நெல்லை மணி..























