கடலில் சிக்கிய கடற்படை கப்பல் - விமானப்படை ஹெலிகொப்டர்களுடன் அவசர மீட்புப் பணி
இலங்கை
அங்குலான கடற்கரைப் பகுதிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் இலங்கை கடற்படையின் ‘ட்வோரா’ (Dvora) ரகக் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தினை அடுத்து கப்பலில் பயணித்த பதினொரு கடற்படையினர் மீட்கப்பட்டு வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், கப்பலில் இருந்தவர்களை மீட்கும் நடவடிக்கை ஒன்று தொடங்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கடற்படையின் கோரிக்கையைத் தொடர்ந்து, மீட்புப் பணியில் இலங்கை விமானப்படையும் உதவியை வழங்கியது.
அதன்படி, ஆபத்தில் சிக்கியுள்ள கப்பலைக் கண்காணிக்கவும் மீட்புப் பணிகளுக்கு உதவவும் Mi-17 மற்றும் Bell 412 ரக ஹெலிகொப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.





















