சாவா பிரிவினையை ஏற்படுத்தும் படம் என ஏ.ஆர். ரகுமான் கூறியதற்கு கங்கனா ரனாவத் எதிர்ப்பு
சினிமா
இந்தி திரைப்படத் துறையில் தனக்கு பாகுபாடு கட்டப்பட்டதாக அண்மையில் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பேசு பொருளானது.
அண்மையில் கொடுத்த பெட்டியின் பேசிய ஏ.ஆர்.ரகுமான், "சாவா பிரிவினையை பேசும் படம்தான். அப்படம் பிரிவினையை முன்வைத்து பணம் சம்பாதித்தது என்றுதான் நினைக்கிறேன். ஆனால், 'வீரத்தை காட்டுவது'தான் அப்படத்தின் மையக்கருவாக நான் பார்க்கிறேன்.
கடந்த 8 வருடங்களாக இந்தி திரைப்படத் துறையில் இசை அமைக்கும் வாய்ப்புகள் எனக்கு அதிகம் கிடைக்கவில்லை. இசைத் துறை, இனி இசைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களின் கைகளில் இல்லை. கார்ப்பரேட் கைகளில் உள்ளது. படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது முடிவெடுக்கும் அதிகாரம் இருப்பதால் பாகுபாடு நிலவுகிறது. எனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு மதரீதியான விஷயமும் காரணமாக இருக்கலாம். இது என் முகத்துக்கு நேராக நடக்கவில்லை என்றாலும், அது போன்ற விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். எனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துக்கு பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "அன்புள்ள ரகுமான் ஜி, நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரையுலகில் நான் முன்முடிவோடு அணுகப்படுவதையும், நிறைய பாரபட்சத்தையும் எதிர்கொள்கிறேன். ஆனால், உங்களை விட பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நான் இயக்கிய Emergency கதையை உங்களுக்கு சொல்ல விரும்பினேன். ஆனால் கதை கேட்பதை விடுங்கள். என்னை சந்திக்க கூட நீங்கள் மறுத்தீர்கள். பிரசார திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருக்க நீங்கள் விரும்பவில்லை என்று எனக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆனால், Emergency ஒரு தலைசிறந்த படைப்பு என்று விமர்சகர்கள் பாராட்டினார்கள். இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட நான் படத்தை அணுகி இருந்த விதத்தை பாராட்டி எனக்கு கடிதங்களை அனுப்பினர். ஆனால் உங்கள் கண்ணை மட்டும் வெறுப்பு மறைத்தது. உங்களுக்காக நான் வருந்துகிறேன்.






















