அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு
இலங்கை
அலவ்வ, வில்கமுவ பகுதியில் நேற்று (17) இரவு இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
வீரே, மெட்டியகனே, நாரம்மல எனும் முகவரியைச் சேர்ந்த 28 வயதுடைய கவிந்து நிமேஷ எனும் இளைஞனே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் குருநாகல் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவ்வ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





















