• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்கா தலைமையிலான சமாதான குழுவில் கனடிய பிரதமர்

கனடா

காசாவில், அமெரிக்கா தலைமையில் அமைக்கப்படும் சமாதான குழுவில் இணையுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை கனடா பிரதமர் மார்க் கார்னி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவிலிருந்து புறப்படும் முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனடா அரசின் மூத்த அதிகாரி ஒருவர், அந்த அழைப்பு அதே நாளில் வந்ததாக தெரிவித்தார்.

கார்னி இந்த அழைப்பை ஏற்க முடிவு செய்திருந்தாலும், அதிகாரப்பூர்வமாக இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், டொனால்ட் டிரம்ப் இந்த சமாதான குழுவின் தலைவராக செயல்படுவார் என்றும், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அவரது மருமகன் ஜேரட் குஷ்னர் மற்றும் முன்னாள் பிரிட்டன் பிரதமர் டோனி ப்ளேர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் மார்க் கார்னியின் பெயர் இடம்பெறவில்லை. குழுவில் அவர் எந்த வகையான பங்கை வகிப்பார் என்பது தெளிவாகவில்லை.

டிரம்ப் தலைமையிலான இந்த குழு, இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான இரண்டு ஆண்டுகளுக்கு மேலான மோதலுக்குப் பிறகு ஏற்படுத்தப்பட்டுள்ள போர் நிறுத்தத்தை மேற்பார்வை செய்வதோடு, காசா பகுதியின் மறுசீரமைப்பையும் கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. 


 

Leave a Reply