சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி
இலங்கை
ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர் வகித்த அனைத்துப் பதவிகளையும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது.
2023-ஆம் ஆண்டில் நடந்ததாகக் கூறப்படும் இலஞ்ச ஊழல் விவகாரம் தொடர்பாக நேற்றைய (25) தினம் அபேசிங்கே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் குற்றச்சாட்டுக்குரிய இந்த சம்பவம் நிகழ்ந்தபோது, அபேசிங்க தமது கட்சியின் உறுப்பினராகவோ அல்லது அமைப்பாளராகவோ இருக்கவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், ஊழல் அல்லது பிற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை அமுல்படுத்துவதை ஆதரிக்கத் தயங்கமாட்டோம் என்றும், அத்தகைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதை எதிர்க்கவில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தி அந்த அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.






















