சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு வாட்ஸ்அப் எண் அறிமுகம்
இலங்கை
சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகச் சுற்றாடல் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ள புதிய வாட்ஸ்அப் (WhatsApp) சேவை, இன்று (26) முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
அதன்படி, பொதுமக்கள் சுற்றுச்சூல் தொடர்பான பிரச்சினைகளை 0702509509 என்ற தொலைபேசி எண் வாயிலாக நேரடியாகத் தெரிவிக்கலாம்.
இந்தத் தகவல் பரிமாற்றச் செயல்பாட்டில், உண்மைகள் மற்றும் சான்றுகளைக் கொண்ட ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளதாகச் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
இச்செயல்முறையின் மூலம் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு மிகவும் துல்லியமான, அறிவியல் பூர்வமான மற்றும் விரைவான தீர்வுகளைப் பெற முடியும் என்று அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், கள அளவில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை உடனடியாகத் தெரிவிக்கவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய யோசனைகள் மற்றும் கருத்துக்களை அதிகாரிகளுக்கு நேரடியாக அனுப்பவும் இது வாய்ப்பளிக்கும் என்றும் அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது.























