• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்ற சம்பவம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட மூன்று பேரை ஆகஸ்ட் 18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திவுலபிட்டிய நகரில் சென்று கொண்டிருந்த பேருந்தின் பின்னால் வந்த கார் ஒன்று திடீரென நின்றது.

அதிலிருந்து இறங்கிய ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் பேருந்து ஓட்டுநரை வாளால் தாக்க முயன்றனர்.

பேருந்தில் பயணித்த ஒருவர் இந்தச் சம்பவத்தைத் தனது கைப்பேசியில் பதிவுசெய்ததோடு, அந்தக் காணொளி சமூக ஊடகங்களிலும் பரப்பப்பட்டது.

காணொளிக் காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, திவுலபிட்டிய பொலிசார் சம்பந்தப்பட்ட காரில் இருந்த சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, அவர்களை ஆகஸ்ட் 18 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 

Leave a Reply