கமல்-ரஜினி நட்பில் நான் பார்த்தவரை ரஜினி தான் தளபதி மாதிரி.
சினிமா
நண்பனுக்காக எதையும் கொடுக்கும் எண்ணம் உடையவராக இருக்கிறார். எத்தனையோ முறை கமலை புகழ்ந்தே பேசி இருக்கிறார்.
"நான் திரைத்துரையில் காலடி வைத்த போது கமல் இங்கே இருக்கிறார். பெரிய நடிகர் அவர். இன்னைக்கு ஏதோ வளர்ந்துட்டோம்னு நாமளே நம்மளை பெரிசா நினைக்கக்கூடாது. என்னைக்குமே கமல் கமல் தான். அந்த உயரத்தில் தான் அவரைப்பார்க்கிறேன்..."
தமிழ்த்திரையில் கமலுக்கு கிடைத்த Comfort zone தொடக்கத்தில் ரஜினிக்கு கிடையாது. அவரை வளர்ச்சியை பிடிக்காதவர்களே அதிகம். ஆனால் ரஜினி வளர மறைமுகமாக கமல் மட்டுமே காரணம். ஒரே பள்ளியிலிருந்து வந்த இரு மாணவர்களின் போட்டியை ஒட்டு மொத்த தமிழகமும் ரசித்தது.
ஆனாலும் ரஜினி கமல் மீதான உரிய மதிப்பை குறைத்துப்பேசியதில்லை.
ஸ்ருதிஹாசனுக்கு ரஜினி 'கூலி' வாய்ப்பு பெரிய வாய்ப்பு.
எல்லாக்காலத்திலும் கமலுக்கு ரஜினி உதவிக்கொண்டே இருக்கிறார். பாட்சா அல்லது முத்துவா தெரியவில்லை. சென்னை நகரில் வெளியிடும் உரிமையை கமலுக்கு கொடுத்தார். அருணாச்சலம் படத்தில் எட்டு பேருக்கு உதவியது நமக்குதெரியும். ஒன்பதாவது உதவியாக கேரள மாநில உரிமையை ராஜ் கமலுக்கே கொடுத்தார். ராஜ்கமல் அங்கு வெளியிட்டது.
இதோ இப்போது ராஜ்கமல் தயாரிப்பில் நடித்துக்கொடுக்கிறார். கமல் 'இன்னொரு படமும் உண்டு" எனச்சொல்லி இருக்கிறார்.
தான் சம்பாதித்த பணத்தை திரைத்துறையிலேயே கமல் போடுவதாக அவர் ரசிகர்கள் சொல்வார்கள். தான் சம்பாதிக்கப்போகும் பணத்தை கமல் மீது போடுகிறார் ரஜினி.
எப்போதுமே 'தேவா' கமலுக்கு 'தளபதி சூர்யா'வாகவே ரஜினி இருக்கிறார். அந்தக்கோட்டை மீறுவதாக இல்லை.
அது அவருக்கு சந்தோஷமே கொடுக்கிறது.
Selvan Anbu






















