மூடத்தனத்தால் ஒரு தலைமுறையையே முடக்கிய தாலிபான் - ஆப்கானிஸ்தானில் 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுப்பு
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சின்கீழ் உயர்நிலைக் கல்வி மறுக்கப்பட்ட 24 லட்சம் பெண் குழந்தைகளுக்கு கல்வி மறுப்பட்டுள்ளதாக ஐநாவின் ன் யுனெஸ்கோ அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகிலேயே பெண்களுக்குப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை முற்றிலுமாகத் தடை செய்துள்ள ஒரே நாடு ஆப்கானிஸ்தான் மட்டுமே.
2021 ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. மத அடிப்படைவாதத்தில் ஊறிய தாலிபான் ஒரு நாட்டையே தன் பிற்போக்குதனத்தால் பல ஆண்டுகள் பின்னோக்கி தள்ளியுள்ளது.
2022 மார்ச்சில் பெண்கள் ஆரம்ப பள்ளியை முடித்து உயர்நிலைப் பள்ளி செல்லவும், அதே ஆண்டு டிசம்பரில் பல்கலைக்கழம் செல்லவும் தடையை அமல்படுத்தியது.
இந்நிலையில் அங்கு ஆரம்ப கல்வி முடித்து உயர்நிலை பள்ளிக் கல்வியில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 24 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.
இதே நிலை நீடித்தால், வரும் 2030ஆம் ஆண்டிற்குள் உயர்நிலை பள்ளிக் கல்வி மறுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 40 லட்சமாக உயரும் என ஐநா சபை எச்சரித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டை விட மேலும் 2 லட்சம் பெண் குழந்தைகள் புதிதாகப் பள்ளிக் கல்வியை இழந்துள்ளனர்.
பெண் ஆசிரியர்கள் ஆண் மாணவர்களுக்கு கற்பிக்க விதிக்கப்பட்ட தடையால், கல்வித்துறையில் கடும் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டிற்குள் தகுதியான 11,000க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்களின் பற்றாக்குறை உருவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பாதிக்கும் மேற்பட்ட பள்ளிகளில் குடிநீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் இல்லை.
ஆரம்பப் பள்ளி அளவிலும் நிலைமை மோசமடைந்துள்ளது. 10 வயதுடைய குழந்தைகளில் 90% பேருக்கு ஒரு எளிய வாக்கியத்தை கூடப் படிக்கத் தெரியவில்லை.
நாட்டின் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகித 37%-ஆகக் குறைந்துள்ளது.
சர்வதேச அளவிலிருந்து கடும் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்த போதிலும், பெண்களுக்கான கல்வித் தடை என்பது தங்களின் உள்நாட்டு விவகாரம் என்பதில் தாலிபான் நிர்வாகம் பிடிவாதமாக உள்ளது.
இத்தனை லட்சம் பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவது ஆப்கானிஸ்தானின் எதிர்காலத் தலைமுறையையும் அதன் பொருளாதாரத்தையும் வெகுவாகப் பாதிக்கும் என சர்வதேச சமூகம் கவலை தெரிவித்துள்ளது.






















