அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்.....
சினிமா
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த வாலி, ஒரு பாடல் எழுத 10 நாட்களாக திணறிய நிலையில், கண்ணதாசன் அதே டியூனுக்கு 10 நிமிடங்களில் பாடலை கொடுத்து அசத்தியுள்ளார்.........
அந்த பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் ஒரு பாடலாக நிலைத்து நிற்கிறது.....
சிவாஜி கணேசன் நடிப்பில், தங்கமலை ரகசியம், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா, கர்ணன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் பி.ஆர்.பந்தலு............
இவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் இயக்கிய படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார். நாகேஷ் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்...........
இந்த படம் தமிழ் சினிமாவில் அப்போது பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் உருவான காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது...........
இதனால் அவரை தவிர்த்து கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தில் அடிமைகளை மீட்டு அழைத்து வரும் போது அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு பாடல் எழுத வேண்டும் என்று வாலிக்கு சொல்லப்பட்டுள்ளது...............
இந்த டியூனை கேட்ட வாலிக்கு பாடல் எழுத முடியவில்லை. 10 நாட்களாக அவர் முயற்சி செய்தும் முடியாத நிலையில், மற்ற கவிஞர்களுக்கும் பாடல் எழுத முயற்சித்துள்ளனர்............
ஆனாலும் முடியாத நிலையில், இறுதியாக எம்.ஜி.ஆர் கண்ணதாசனிடம் கேட்குமாறு கூறியுள்ளார்............
அதன் பிறகு அவர் சொன்னவுடன், கண்ணதாசனுக்கு தகவல் செல்ல, உடனடியாக அந்த டியூனுக்கு ஏற்ப கண்ணதாசன் பல்லவி கொடுத்துள்ளார். இதை கேட்ட எம்.ஜி.ஆர் அருமையாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு கண்ணதாசனை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்..............
அரசியலில் ஏற்பட்ட மோதல் இந்த ஒற்றை பாடலால் மீண்டும் ஒன்றினைந்தது. அந்த பாடல் தான் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற ‘’அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஒரு பாடல் மட்டுமல்லாமல் மேலும் 2 பாடல்களையும் கண்ணதாசன் இந்த படத்தில் எழுதியுள்ளார்.






















