• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சிவநாயகி சுப்பிரமணியம்

பிறப்பு 24 JUL 1936 / இறப்பு 24 JUN 2026

யாழ். ஏழாலை வடக்கு ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவநாயகி சுப்பிரமணியம் அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், பொன்னையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், செல்லப்பா தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லப்பா சுப்பிரமணியம்(முன்னாள் ஆசிரியர்- ஏழாலை சைவ மகாஜனா வித்தியாசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவபாதசுந்தரம், சிவமணி மற்றும் சிவானந்தநாதன்(ஆனந்தன்), Dr. சிவானந்தசுந்தரம்(ஞானா), சிவனேஸ்வரி, சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தங்கவேல், ஜெயரூபன்(சுவிஸ்), ஸ்ரீதரன்(கரன்- Harrow லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சர்மிளா(சுவிஸ்), சுபா(Harrow லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெதுஷன், ஜானுகா(சுவிஸ்), திபிக்‌ஷா, தீக்‌ஷா, திஷா(Harrow லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
இல. 31, மாசியப்புல வீதி,
ஏழாலை வடக்கு,
ஏழாலை.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கரன் - மகன்

    Mobile : +447469963874

சுபா - மருமகள்

    Mobile : +447593273217

United Kingdom - குடும்பத்தினர்

    Mobile : +442089224398

ஜெயரூபன் - மகன்

    Mobile : +41764114850

Leave a Reply